Published : 28 Feb 2023 04:03 AM
Last Updated : 28 Feb 2023 04:03 AM
கடலூர்: சிதம்பரம் அருகே வக்காரமாரி கிராமத்தில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வரவில்லை. 1 கி.மீ தூரத்தில் உள்ள செட்டிமேடு மற்றும் நாஞ்சலூர் கிராமப்பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் குடிநீர் குழாய் உள்ள இடத்தில் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு குடிசை வீடு கட்டிக்கொண்டு குடிநீர் குழாயை உடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குடிசை வீட்டை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்; குடிநீர் பிரச்சினையை சரிசெய்யவேண்டும் என்றும் காட்டுமன்னார்கோவில்- சிதம்பரம் நெடுஞ்சாலையில் வக்காரமாரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், வட்டாட்சியர் செல்வகுமார், நகராட்சி பொறியாளர் மகாராஜன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT