

ரஷ்யாவைச் சேர்ந்தவர் நிக்கட்டின் சர்ச் (34). இவர், தனது நண்பர்களுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். கோவா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்ற அவர்கள், பின்னர் வேளாங்கண்ணி வந்தனர்.
வேளாங்கண்ணி கடற்கரையில் நிக்கட்டின் முகாம் அமைத்து தங்கியிருந்தார். வெள்ளிக்கிழமை காலை முகாமிலிருந்து வெளியே வந்த நிக்கட்டினை, நான்கு பேர் வழிமறித்து தாக்கியுள்ளனர். மேலும், அவரிடமிருந்த பணத்தையும், செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பிவிட் டனர். தகவலறிந்து வந்த வேளாங்கண்ணி போலீஸார், நிக்கட்டினை நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.