

சென்னை: நகர ஊரமைப்பு இயக்ககத்தின் (டிடிபிசி) எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 2011-ம்ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்டன. இதற்காக, ஒரு சதுர அடிக்கு ரூ.7.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இதற்கான கால அவகாசம் நிறைவு பெற்ற நிலையில், வரும் ஜூன் 30-ம் தேதிவரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, நகர ஊரமைப்பு இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ள வீட்டுவசதித் துறை செயலர்அபூர்வா, அரசு கால அவகாசத்தை நீட்டித்துள்ளதால், விண்ணப்பங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், இந்த நீட்டிப்பு தொடர்பாக தகவல் வெளியிடும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.