Published : 26 Feb 2023 04:23 AM
Last Updated : 26 Feb 2023 04:23 AM

காகிதப் பைக்கு கட்டணம் வசூல்: பாளை. ஸ்வீட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம்

திருநெல்வேலி: பாளையங்கோட்டையிலுள்ள பிரபல ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி பர்கிட் மாநகரம் எம்ஜிஆர் நகர் ஆறுமுகம் மகன் பரமசிவம் என்பவர் பாளையங்கோட்டையில் உள்ள பிரபல ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் 2 கிலோ ஸ்வீட் வாங்கியுள்ளார். இதற்கான விலை ரூ.400 மற்றும் அந்நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்ட காகித பைக்கு ரூ.20-ம் சேர்த்து கட்டணம் வசூலித்துள்ளனர்.

நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்ட காகிதப் பைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தெரிவித்து, அதை பரமசிவம் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அந்நிறுவனத்தில் இருந்தவர்கள் தரமறுத்து விட்டனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பரமசிவம், வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அதனை விசாரணை செய்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் கிளாஸ்டன் பிளஸட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் மனுதாரிடம் காகித பைக்கு ரூ.20 வசூலித்தது முறையற்ற வாணிபம் என்று தெரிவித்து, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்க ஸ்வீட்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x