Published : 25 Feb 2023 07:52 AM
Last Updated : 25 Feb 2023 07:52 AM
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் மன்னார்வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி, ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் வழியாக, இலங்கைக்கு சட்டவிரோதமாகப் போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. மேலும், இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு தங்கம் கடத்தப்படுகிறது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க இந்திய கடற்படை, கடலோரக் காவல் படையினர் ஆகியோர், இந்திய-இலங்கை சர்வதேசக் கடல் எல்லையில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகரிக்கும் கடத்தல்: எனினும், கடந்த 3 மாதங்களாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வேதாளை, மரைக்காயர்பட்டினம் கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா எண்ணெய், கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருட்கள் பிடிபட்டன.
மேலும், வாசனை திரவியங்களுடன் கூடிய நகப் பூச்சு, சமையல் மஞ்சள், வலி நிவாரணி மாத்திரைகள், கடல் அட்டைகள், உரம் ஆகியவை அதிக அளவில் பிடிபட்டுள்ளன.
17.74 கிலோ தங்கம்: அதேபோல, இலங்கையி லிருந்து தமிழகத்துக்குக் கடத்த முயன்ற, ரூ 10.50 கோடி மதிப்பிலான 17.74 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டிஜிபி சைலேந்திர பாபு இன்று (பிப். 25) ராமநாதபுரம் வருகிறார்.
கடலோரப் பகுதிகளில் போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் கடத்தல்களைத் தடுப் பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக, மண்டபம், ராமேசுவரத்தில் உள்ள மெரைன்காவல் நிலையங்களிலும், ராமநாதபுரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலும் நடைபெற உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில்அவர் கலந்துகொள்கிறார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT