

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை திருநங்கை எவரும் எழுதவில்லை என அரசு தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (நேற்று) வெளியிடப்பட்டன. தேர்வு முடிவில், 3-ம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வு எழுதியதாகவும், அவர் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு அளிக்கப்பட்ட தகவல், சம்பந்தப்பட்ட பள்ளியிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டது. உண்மையில், அந்த தேர்வர், ஒரு மாணவி ஆவார். திருநங்கை எவரும் மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவில்லை.