Published : 25 Feb 2023 06:09 AM
Last Updated : 25 Feb 2023 06:09 AM

விருதுநகரில் பிரசவத்தின்போது தாய், சிசு உயிரிழப்பு: அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் சாலை மறியல்

விருதுநகர் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்ட இறந்த முத்துமாரியின் உறவினர்கள். (உள்படம்) முத்துமாரி.

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் பிர சவத்தின்போது தாய், சிசு அடுத் தடுத்து உயிரிழந்தனர். இதனால், உறவினர்கள் மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகாசி பாரதி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (40). பட் டாசுத் தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (30). இவர் களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்து ஒன்றரை மாதங்களுக்குப் பின் உயிரி ழந்தது.

13 ஆண்டுகளுக்குப் பின் மீண் டும் கர்ப்பமடைந்த முத்துமாரி பிரசவத்துக்காக பிப்.22-ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் ஆண் சிசுவை எடுத்தபோது இறந்திருந்தது. சிசுவின் உடல் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறுதிச் சடங்குகள் முடிந்து மாலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திரும்பிய பன்னீர் செல்வம் மற்றும் உறவினர்கள், முத்துமாரியை பார்க்கச் சென் றனர்.

அப்போது ஊழியர்கள் பார்ப் பதற்கு அனுமதி மறுத்தனர். சற்று நேரத்துக்குப் பின் முத்துமாரியும் இறந்துவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திலும் மருத்துவமனை முன்பும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கூடுதல் எஸ்.பி.மணிவண்ணன், டிஎஸ்பி அர்ச்சனா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்துவதாக தெரிவித்ததால் மறியல் கைவிடப்பட்டது. அதன்பின், விருதுநகர் வந்த டிஜிபி சைலேந்திரபாபுவிடமும் பன்னீர் செல்வம் இது குறித்து புகார் மனு அளித்தார். உரிய விசாரணை நடத்த உத்தரவிடுவதாக டிஜிபி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x