

வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தனியார் எண்ணெய் நிறுவனம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனியார் சமையல் எண்ணெய் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான 54 இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் கடந்த 3 ஆண்டுகளாக ரூ.90 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், அபராதத் தொகையுடன் வரித் தொகையை செலுத்த அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.