Published : 22 May 2017 10:36 AM
Last Updated : 22 May 2017 10:36 AM

இலங்கையில் ஆட்சியாளர்கள் மாறினாலும் தமிழருக்கு எதிரான செயல்பாடுகள் மாறவில்லை: யாழ்ப்பாணம் மாவட்ட உறுப்பினர் ஆதங்கம்

இலங்கையில் ஆட்சியாளர்கள் மாறினாலும் தமிழர்களுக் கெதிரான செயல்பாடுகள் மாறவில்லை என இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண கூட்டமைப்பு யாழ்ப்பாணம் மாவட்ட உறுப்பினர் ஆனந்தி சசீதரன் தெரிவித்துள்ளார்.

வீரன் சுந்தரலிங்கனார் குறித்த ஆவணப்பட வெளி யீட்டு விழா மதுரை ஒத்தக் கடையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: மிகப்பெரிய யுத்தத்திலிருந்து மீண்டு வந்த தமிழ் மக்களின் அடிப் படை பிரச்சினைகள் இது வரை தீர்க்கப்படவில்லை. உடல் உறுப்புகள் மற்றும் உடமை களை இழந்து வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதார தேவை களை முற்றிலும் இழந்து அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 2009-ம் ஆண்டு போர் முடிவுற்றதற்குப்பின் வழிகாட்டக்கூடிய சரியான தலைமை இல்லாததால் இலங்கை மட்டுமின்றி சர்வதேச நாடுகளால்கூட இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. தமிழர்கள் இன்னும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.

தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் மலையக தமிழர் களுக்கு நியாயமான கூலி கூட மறுக்கப்படுகிறது. ஆனால் இலங்கை அரசு இதனை கண்டு கொள்ளவில்லை. இப்பகுதிகளில் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தாமல் ஏராளமான மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மலையக தமிழர்கள் பலமுனை போராட்டங்களை முன்னெடுத்தாலும்கூட பொய்யான வாக்குறுதிகளால் அவை முறியடிக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகளாக உள்ள அரசியல் தலைவர்கள் அதிகாரப் போட்டி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திரமோடி மலையக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு நேரில் செல்லாதது வருத்தமளிக்கிறது. இந்திய வம்சாவளி தமிழர்களின் நிலையை மேம்படுத்துவதில் இந்திய பிரதமர் அக்கறை செலுத்த வேண்டும். இதுசம்பந்தமாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கையில் போர் முடிந்து 8 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் ஆட்சியாளர்கள்தான் மாறியிருக்கிறார்களே தவிர தமிழர்களுக்கு எதிரான செயல் பாடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

சர்வதேச போர்க்குற்ற விசா ரணையிலிருந்து முன்னாள் அதிபர் ராஜபக்சேவை தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா காப்பாற்றிவிட்டார்.

இலங்கை நாட்டு ஆட்சியாளர்களால் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வருவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ராஜபக்சே சீன அரசோடு ஏற்படுத்திய ஒப்பந் தத்தின் அடிப்படையில் அந்நாட்டு மீனவர்கள் எங்கள் கடற்பரப்பில் மீன்பிடித்துச் செல்கின்றனர். கடற்பரப்பில் எங்களுக்கு இருந்த உரிமையை இலங்கை ராணுவம் முற்றிலுமாக பறித்துவிட்டது. மறுபடியும் போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஆனால் ஆங்காங்கே தன்னெழுச்சி யாக மக்கள் போராட்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x