கார்ல் மார்க்ஸ் குறித்த கருத்து: ஆளுநருக்கு ராமதாஸ் கண்டனம்

ராமதாஸ் | கோப்புப் படம்
ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கார்ல் மார்க்ஸ் குறித்த ஆளுநரின் கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," செருமானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்ஸின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை; அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ரவி கூறியிருப்பது தவறு, கண்டிக்கத்தக்கது.

கார்ல் மார்க்ஸ் எந்த நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை; அது அவரது கொள்கையும் அல்ல. கார்ல் மார்க்ஸின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை என்பதையே அவரின் கருத்துகள் காட்டுகின்றன!

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்ஸின் கொள்கையாகும். அவரின் கொள்கைகளையும், மூலதனம் நூலையும் உலகமே பாராட்டுகிறது. பாமகவின் கொள்கை வழிகாட்டிகளில் மார்க்சும் ஒருவர்.

கார்ல் மார்க்ஸ் குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது, அது அவருக்கு வழங்கப்பட்ட பணியும் அல்ல. கார்ல் மார்க்ஸ் குறித்து தவறான தனது விமர்சனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்!" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in