சென்னை கோட்டத்தில் 9 ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம்

சென்னை கோட்டத்தில் 9 ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம்
Updated on
1 min read

சென்னை: சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட 9 ரயில் நிலையங்களில் தனியார் பங்களிப்போடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (ஆர்.ஓ.) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் தனியார் பங்களிப்போடு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை கோட்டத்தில் உள்ள சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஆவடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9ரயில் நிலையங்களில் தனியார் பங்களிப்போடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்வேக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து, வணிக பயன்பாடு மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, தனியாரின் பங்களிப்போடு இந்த 9 ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க உள்ளோம்.

விருப்பமுள்ள பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கலாம். இதற்கான, நீர்,மின்சார வசதியை ரயில்வே நிர்வாகம்வழங்கும். பயணிகளுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in