

தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழக மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். நேற்று இயல்புக்கு மாறாக கடலோர மாவட் டங்களில் வெப்பம் அதிகமாக இருந்தது. வழக்கமாக காலை யிலேயே கடல் காற்று வீசத் தொடங்கும். ஆனால் நேற்று பிற்பகல் 12.45 மணிக்கு பிறகே கடல் காற்று வீசத் தொடங்கியது. இதனால் சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி ஆகிய கடலோர நகரங்களில் வெப்பம் அதிகமாக இருந்தது.
மழையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப் புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.