

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரி வித்து தமிழர் முன்னேற்றப் படை அமைப்பினர் அதன் தலைவர் கி.வீர லட்சுமி தலைமையில் சென்னையில் நேற்று முன்தினம் போராட்டம் நடத் தினர். ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள், ரஜினி உருவ பொம்மையையும் கொளுத்தினர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ரஜினி ரசிகர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டை திரு வொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தபால் நிலையம் அருகே ரஜினி ரசிகர் மன்ற வட சென்னை மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், துணைச் செயலாளர் சத்யா தலை மையில் 50-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் நேற்று காலை திரண்டனர்.
ரஜினி உருவ பொம்மையை எரித்த தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி உள்ளிட்டோ ருக்கு எதிராக கோஷமிட்டனர். வீரலட்சுமியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அதை போலீஸார் தடுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீஸார் கைது செய்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மதுரை உள் ளிட்ட இடங்களிலும் ரஜினி ரசிகர் கள் நேற்று போராட்டம் நடத்தினர்.