எஸ்எஸ்எல்சி தேர்ச்சியில் தென்மாவட்டங்களே தொடர்ந்து முன்னிலை: பின்தங்கிய நிலையில் வடமாவட்டங்கள்

எஸ்எஸ்எல்சி தேர்ச்சியில் தென்மாவட்டங்களே தொடர்ந்து முன்னிலை: பின்தங்கிய நிலையில் வடமாவட்டங்கள்
Updated on
2 min read

எஸ்எஸ்எல்சி தேர்வு தேர்ச்சியில் தென்மாவட்டங்களே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன. மாநிலத்தின் தலைநகரான சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப் பட்டன. மாணவர்களின் தேர்ச்சி விகித அடிப்படையில், 98.55 சதவீத தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி 2-வது இடத்தையும் (98.17 சதவீதம்), கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என சொல்லப்படும் ராமநாதபுரம் 3-ம் இடத்தையும் (98.16 சதவீதம்), மேற்கு மாவட்டமான ஈரோடு 4-ம் இடத்தையும் (97.97 சதவீதம்), தூத்துக்குடி மாவட்டம் 5-வது இடத்தையும் (97.16 சதவீதம்) பெற்றுள்ளன.

தமிழகத்தின் வடமாவட்டங் கள் பின்னுக்கு தள்ளப்பட் டுள்ளன. இதில் மாநிலத்தின் தலைநகரம் சென்னையும் அடங்கும். 88.74 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள கடலூர் மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற பள்ளி, கல்லூரிகள் சூழ்ந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தென்மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது பின்தங்கிய நிலையில் உள்ளன. சென்னை மாவட்டம் 93.86 சதவீதமும், காஞ்சிபுரம் மாவட்டம் 93.51 சதவீதமும், திருவள்ளூர் மாவட்டம் 91.65 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளன.

கடந்த 3 ஆண்டுகளாகவே எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதத்தில் வடமாவட்டங்களை விடவும் தென்மாவட்டங்களும், மேற்கு மாவட்டங்களும்தான் முன்னிலையில் இருந்து வருகின்றன. 2015-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில், மேற்கு மாவட்டமான ஈரோடு முதலிடத்தைப் பிடித்தது.

அந்த மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 98.04 சதவீதமாக இருந்தது. விருதுநகர் மாவட்டம் 2-வது இடமும் (97.98 சதவீதம்), திருச்சி மாவட்டம் 3-ம் இடமும் (97.62 சதவீதம்), கன்னியாகுமரி மாவட்டம் 4-ம் இடத்தையும் (97.27 சதவீதம்) பிடித்தன.

திருவாரூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. அந்த ஆண்டில் திருவாரூர் மாவட்டம் கடைசி இடத்துக்கு (83.78 சதவீதம்) தள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு, தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முதலிடத்தை (98.48 சதவீதம்) தக்கவைத்துக்கொண்டது.

கன்னியாகுமரி மாவட்டம் 2-ம் இடத்தையும் (98.17 சதவீதம்), விருதுநகர் மாவட்டம் 3-ம் இடத்தையும் (97.81 சதவீதம்), ராமநாதபுரம் 4-ம் இடத்தையும் (97.10 சதவீதம்) பிடித்தன. வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தை தாண்டவில்லை. 86.49 சதவீத தேர்ச்சி பெற்ற வேலூர் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

கடந்த 3 ஆண்டுளில்

கடந்த 3 ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம், 94 சதவீதம், 92 சதவீதம், 90 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது.

தமிழகத்தின் வடமாவட்டங்கள் பின்னுக்கு தள்ளப்பட் டுள்ளன. இதில் மாநிலத்தின் தலைநகரம் சென்னையும் அடங்கும். 88.74 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள கடலூர் மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in