ஐஆர்சிடிசி புதிய திட்டம் அறிமுகம்: ரயில் டிக்கெட் வீடு தேடி வரும்

ஐஆர்சிடிசி புதிய திட்டம் அறிமுகம்: ரயில் டிக்கெட் வீடு தேடி வரும்
Updated on
1 min read

ரயில் டிக்கெட்களை வீட்டுக்கே வந்து அளிக்கும் புதிய திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி யுள்ளது.

பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை பல்வேறு திட்டங் களைச் செயல்படுத்தி வருகிறேது. குறிப்பாக, ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க இணைய தளம், செல்போன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி களை ஏற்கெனவே அறிமுகப்படுத் தியுள்ளது.

இந்நிலையில், புதிதாக ‘பே ஆன் டெலிவரி’ என்னும் திட் டத்தை ஐஆர்சிடிசி அறிமுகப் படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமாகவோ, ஐஆர்சிடிசி ஆப் மூலமாகவோ ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்படும்.

இந்த வசதியை பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண் அல்லது பான் எண்ணை ஐஆர்சிடிசியில் பதிவு செய்திருக்க வேண்டும். ரூ.5 ஆயிரம் வரை டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணமாக ரூ.90, ரூ.5 ஆயிரத்துக்கு மேல் முன் பதிவு செய்வோருக்கு ரூ.120 வசூலிக்கப்படும். மேலும் டிக்கெட் டெலிவரிக்கு முன்பு அதனை ரத்து செய்தால் அதற்கான விநியோகக் கட்டணத்தையும் செலுத்த வேண் டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in