

ஜனநாயக முறை கெட்டுப்போக திராவிட கட்சிகள்தான் காரணம். இதனை ரஜினி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். எந்த ரூபத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அதனை வரவேற்கிறோம் என, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
ஒரே நாடு, ஒரே வரிவிதிப்பு, ஒரே சந்தைத் திட்டம் ஆகியவை கடந்த 2003-ம் ஆண்டு பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. 14 ஆண்டுக்கு பின் ஜிஎஸ்டியாக இது உருவெடுத் துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை முதல் அமலுக்கு வரு கிறது. ஏழை, எளிய மக்கள் ஜிஎஸ்டி யால் அதிகம் பயன் பெறுவர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும் பமே ஊழலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஜனநாயக முறை கெட்டுவிட்டதாக ரஜினி கூறியுள் ளார். ஜனநாயக முறையை யார் கெடுத்தார்கள் என பார்க்க வேண் டும். தமிழக மக்கள் தூக்கி எறிந் தால் இமயமலைக்குச் சென்றுவிடு வேன் என்று கூறி உள்ளார். அவர் எந்த அளவு காயப்பட்டுள்ளார் என்பதை இதில் இருந்து அறிய லாம். ரஜினிக்கு விமர்சனம் செய்ய உரிமை, அதிகாரம் உள்ளது.
ஜனநாய முறை கெட்டுப்போக திராவிட கட்சிகள்தான் காரணம். இதனை ரஜினி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். எந்த ரூபத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அதனை வரவேற்கிறோம்.
அரசு மருத்துவமனையில் 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை தமிழக முதல்வர் ஆய்வுக்கு உட்படுத்தி விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இந்தி மொழிக்கு எதிராக திமுகவினர் போராடினால், அக்கட்சி நிர்வாகி களின் குழந்தைகள், பேரன்கள் படிக்கும் பள்ளிகள், கற்கும் மொழி குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்க பாஜகவினரும் வீதி யில் இறங்குவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழிசை கருத்து
இதற்கிடையே, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கிருஷ்ணகிரியில் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “அரசி யலுக்கு வருவது குறித்து ஆண்ட வன் முடிவு செய்வார் என ரஜினி கூறுவதைப் போல் அவர் எந்தக் கட்சியோடு கூட்டணி சேர்வார் என்பதையும் ஆண்டவனே முடிவு செய்வார்” என்றார்.