

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளைத் தொடங்க திட்ட மிட்டுள்ளன. அரசின் உத்தரவை மீறி திறக்கப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் மத்தியில் வலுப் பெற்று வருகிறது.
வழக்கத்துக்கு மாறாக வட மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் தேதி வரும் ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. மேலும் கோடை விடு முறை காலத்தில் சிறப்பு வகுப்பு களை நடத்தவும் அரசு தடை விதித் துள்ளது.
முன்னரே தொடங்கிவிட்டன
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சில முன்னணி பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் முன்னரே நடந்து வருகின்றன. மேலும் மாணவர்களை வரும் ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும்படி சில பள்ளிகள் தற்போது அறிவுறுத்தியுள்ளன. அரசு உத் தரவுக்கு எதிராக தனியார் பள்ளி நிர்வாகங்கள் இத்தகைய செயல் களில் ஈடுபடுவது, பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இது தொடர்பாக தாம்பரத்தைச் சேர்ந்த பெற்றோர் கூறும்போது, தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறி, பள்ளிகளை திறந்தாலோ, சிறப்பு வகுப்பு நடத் தினாலோ, அது குறித்து மெட்ரிக் பள்ளிகள் துறையிடம் புகார் தெரிவித்தால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதோடு சரி. அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அந்த தைரியத்தி லேயே, தனியார் பள்ளிகள், அரசு உத்தரவை மதிக்காமல், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்ற பள்ளிகளை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக மாநில மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அலுவல கத்தில் கேட்டபோது, அரசின் உத்தரவை மீறி பள்ளிகள் ஏதேனும் ஜூன் 1 முதல் செயல்பட்டால், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அலுவலகத்துக்கு 044- 28270169 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் தெரிவித்தால் எங்கள் துறை யின் மாவட்ட ஆய்வாளர்கள், சம்மந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப் படும். முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுப்போம். அதையும் மீறி, விதிமீறலைத் தொடர்ந்தால், அப்பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.