

நாட்டிலேயே முதல்முறையாக பெரிய அளவிலான போயிங் விமானத்தை சென்னை டெல்லி இடையே ஏர்-இந்தியா நேற்று இயக்கியது. இது 342 பேர் பயணம் செய்யக்கூடிய போயிங் 777 விமானம் ஆகும்.
தினமும் சென்னையில் இருந்து 2 முறையும், டெல்லியில் இருந்து 2 முறையும் இந்த விமானம் இயக் கப்படுகிறது. டெல்லியில் காலை 6.05-க்கு புறப்பட்டு 8.45-க்கு சென்னை வருகிறது. சென்னை யில் காலை 9.55-க்கு புறப்பட்டு பகல் 12.55 மணிக்கு டெல்லி செல்கிறது. மீண்டும் டெல்லியில் மாலை 5.20-க்கு புறப்பட்டு இரவு 8.05-க்கு சென்னை வருகிறது. சென்னையில் இரவு 9.10-க்கு புறப்பட்டு இரவு 11.55-க்கு டெல்லி செல்கிறது. இதுபோன்ற பெரிய விமானத்தை அமெரிக்காவுக்கு ஏர்-இந்தியா இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.