மது இல்லாத மாநிலமாக தமிழகம், புதுச்சேரி: பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை

மது இல்லாத மாநிலமாக தமிழகம், புதுச்சேரி: பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை
Updated on
1 min read

எதிர்காலத்தில் ஒரு சொட்டு மது இல்லாத மாநிலமாக தமிழகம், புதுச்சேரி திகழும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று ராமதாஸ் பேசியதாவது: நாடு முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடை களை மூட சட்டரீதியாக அணுகி பாமக வெற்றி பெற்றுள்ளது. எதிர் காலத்தில் தமிழகம், புதுச்சேரி ஒரு சொட்டு மது இல்லாத மாநில மாக திகழும்.

எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திண்டிவனம் அருகே கோனேரிக் குப்பத்தில் வன்னியர் கல்வி அறக் கட்டளை தொடங்கினேன். அதில் ஒரு சட்டக்கல்லூரியை உருவாக் கியபோது தமிழகத்தை ஆண்ட இரு கட்சிகளும் அங்கீகாரம் தர மறுத்துவிட்டன. அனுமதி வழங்க உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மதிக்கவில்லை. தற்போது அதிமுக அமைச்சர் 3 சட்டக்கல்லூரி தொடங்கப் போவதாக கூறுகிறார். அதில் ஒன்று விழுப்புரத்தில் என்கிறார்.

புதுச்சேரி மாநிலத்தில் மது ஒழிந்து மக்கள் நிம்மதியாக வாழவும், கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் இல்லாத மாநிலமாக புதுச்சேரி திகழ எல்லா சமுதாய மக்களும் மாற்றத்தை விரும்புங்கள். தமிழகத்தில் எல்லா மக்களும் பாமகவால்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று நம்புகிறார்கள்என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in