பிளஸ் 2 தேர்வில் 1000-க்கு மேல் மதிப்பெண் எடுத்த ஆயுள் தண்டனை கைதிகள்

பிளஸ் 2 தேர்வில் 1000-க்கு மேல் மதிப்பெண் எடுத்த ஆயுள் தண்டனை கைதிகள்
Updated on
1 min read

பிளஸ் 2 தேர்வில் 1000-க்கு மேல் ஆயுள் தண்டனை கைதிகள் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6,737 பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் 2,427 மையங்களில் தேர்வெழுதினர். தனித் தேர்வர்களாக 31,843 பேரும், சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதினர்.

இந்நிலையில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், புழல் மத்திய சிறைக் கைதி முத்துச்செல்வன் 1064 மதிப்பெண்ணும், பாளையங்கோட்டை மத்திய சிறைக் கைதி முத்துராமலிங்கம் 1057 மதிப்பெண்ணும், திருச்சி மத்திய சிறைக் கதை செந்தில்குமார் 1052 மதிப்பெண்ணும் பெற்றது தெரிய வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in