

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளை கிராமப்புறங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளை கிராமப்புறங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவி்த்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுபானக் கடைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த வாரம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியிருப்பு பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது. கிராம சபைகளில் மதுவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் அந்த கிராமங்களி்ல் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என தடை விதித்தும், மதுவுக்கு எதிராக அறவழியில் போராடி வருபவர்களை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
இந்த தடையை நீக்க வலியுறுத்தி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.எம்.சுப்ரமணியம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
டாஸ்மாக் மதுபானக் கடைகள் விஷயத்தில் தமிழக அரசின் கொள்கை வினோதமானதாக உள்ளது. பொது சுகாதாரத்தைப் பேண பல்வேறு திட்டங்களை வகுத்துள்ள தமிழக அரசு 108 போன்ற ஆம்புலன்ஸ் திட்டங்களை திறமையாக செயல்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் மற்றொரு புறம் மதுபானக் கடைகளை திறந்து வைத்து மதுவைக் குடியுங்கள் என்கிறது. குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை யும் ஆட்டக்கூடாது. உண்மையான ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்கு உருவாக்கப்பட்டதுதான். எனவே மது வுக்கு எதிரான மனநிலையில் உள்ள மக்களின் கருத்துகளுக் கும், எண்ணத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும். எனவே டாஸ்மாக் மதுபான விஷயத்தில் தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.