

புதுச்சேரி: புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவனையில் குழந்தைகளுக்கான வெளிப்புற சிசிச்சை பிரிவில் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரை பெயர் பதிவு செய்யப்படும்.
தொடர்ந்து காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சிகிச்சை அளிக்கப்படும். மேலும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படுகிறது. போதிய மருத்துவர்கள் இல்லாததால் புதுவை அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தைகளுடன் காத்திருக்கும் பெற்றோர்.
தற்போது வெளிப்புற சிகிச்சை பிரிவு இல்லாத நேரங்களில், சளி, காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளை சிகிச்சைக்காக, அவசர சிகிச்சைப்பிரிவுக்கு பெற்றோர் அழைத்து வரு
கின்றனர்.
அங்கு ஒரு மருத்துவர் மட்டும் பணியில் இருப்பதால் பெற்றோர், குழந்தைகளுடன் தவிக்கின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப்பிரிவில் கூடுதல் மருத்துவர்கள் இருப்பது போல், குழந்தைகள் மருத்துவமனையிலும் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவிடம் தெரி விக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, குழந்தைகள் மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவிலும் 24 மணிநேரமும் 3 மருத்துவர்கள் பணியில் இருக்க உத்தர விடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்தார்.