அனைத்து பள்ளிகளிலும் மாற்றுச்சான்று அறிமுகம்

அனைத்து பள்ளிகளிலும் மாற்றுச்சான்று அறிமுகம்
Updated on
1 min read

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்போல தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் ரெக்கார்டு ஷீட்டுக்கு பதிலாக மாற்றுச்சான்றிதழ் (டிசி) வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு தற்போது ரெக்கார்டு ஷீட் (பதிவுத்தாள்) வழங்கப் படுகிறது. நீண்ட காலமாக உள்ள இந்த நடைமுறையை மாற்ற திட்டமிடப்பட் டுள்ளது. உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு டிசி எனப்படும் மாற்றுச்சான்றிதழ் கொடுக்கப்படுவதுபோல, தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் டிசி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in