

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
திருச்சூரைச் சேர்ந்த சதீசன், திபு, சந்தோஷ், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜெம்சீர் அலி, மனோஜ் சமி, வாளயார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கடைசி குற்றவாளியான கேரளா திருச்சூரைச் சேர்ந்த குட்ட என்கிற ஜிஜின் என்பவரை கோத்தகிரி போலீஸார் இன்று (திங்கள்கிழமை) கைது செய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனறர்.
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்ட நிலையில் மற்றொரு குற்றவாளி சயான் விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோடநாடு காவலாளி கொலை வழக்கில் ஈடுபட்ட 11 பேர் சிக்கியதால் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.