

தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ், சேகர் ரெட்டி வீடுகளில் சோதனை நடத்திய வருமான வரித் துறை அதிகாரி புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ், சேகர் ரெட்டி வீடுகளில் சோதனை நடத்திய வருமான வரித் துறை அதிகாரி புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி மற்றும் அவர் தொடர்பான இடங்களில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் வீடு, அலுவலகத்தில் டிசம்பர் 21-ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புனேவுக்கு மாற்றம்
சென்னை வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு கூடுதல் ஆணையர் ராய் ஜோஸ் தலைமையிலேயே இந்த சோதனைகள் நடந்தன. இந்த சோதனைகளைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளிலும் ராய் ஜோஸ் முக்கிய பங்கு வகித்தார். இந் நிலையில் அவரை மகாராஷ் டிர மாநிலம் புனேவுக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து புலனாய்வுப் பிரிவு கூடுதல் ஆணையர் பொறுப்பை, மற்றொரு கூடுதல் ஆணையரான ஜெய ராகவன் ஏற்றுள்ளார். அமைச் சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் ஜெய ராகவன் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இனிமேல், அமைச் சர் விஜயபாஸ்கர் மற்றும் சேகர் ரெட்டி ஆகி யோரின் வழக்குகளை கூடுதல் ஆணையர் ஜெயராகவனே கவனிப்பார்.