

இரட்டை இலை சின்னம் பெறுவ தற்கு லஞ்சம் கொடுத்த விவகாரத் தில், லஞ்சம் பெற முயன்ற தேர்தல் ஆணைய அதிகாரியின் பெயரை டெல்லி போலீஸார் வெளியிடாமல் இருப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறு வதற்காக தேர்தல் ஆணையத் துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற தாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி.தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கடந்த 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
லஞ்ச பணத்தைப் பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்பவரை கடந்த 28-ம் தேதி டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இதுவரை டிடிவி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ், ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 4 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில், தலைமை தேர்தல் ஆணையத்தில் பணிபுரி யும் முக்கிய அதிகாரி ஒருவக்கும் தொடர்பு இருந்துள்ளது. இந்த தேர்தல் அதிகாரியைதான் இடைத் தரகர் சுகேஷ் சந்தித்து லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகி றது. அந்த தேர்தல் அதிகாரியிடம் சுகேஷ் பேசவும் செய்து இருக் கிறார். ஆனால் லஞ்சப் பணத்தை கொடுப்பதற்கு முன்னதாகவே சுகேஷ், தினகரன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு விட்டனர்.
தேர்தல் அதிகாரியின் பெயரையும் வழக்கில் தொடர்பு படுத்தினால் அது மத்திய அரசுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும். உத்தர பிரதேச தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தில் தில்லுமுல்லு செய்து பாரதிய ஜனதா வெற்றி பெற்று விட்டதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரி லஞ்சம் வாங்க முயன்றது தெரியவந்தால் அது இன்னும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, இந்த வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரியின் பெயர் வராமல், டெல்லி போலீஸார் பார்த் துக் கொண்டதாக கூறப்படுகிறது.