ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது சரியே: கே.பாலகிருஷ்ணன் பாராட்டு

கே.பாலகிருஷ்ணன் | கோப்புப் படம்
கே.பாலகிருஷ்ணன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரத்தில் சட்டம் - ஒழுங்கு சார்ந்த விஷயங்களை உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுக்க தவறிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு உயர் நீதிமன்றம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என சி.பி.ஐ (எம்) கோரியது. தற்போது தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது வரவேற்புக்குரியதாகும்.

மக்களிடையே வெறுப்பினை பரப்பி, மோதலை உருவாக்கும் சக்திகளை ஜனநாயக இயக்கங்களைப் போல கருத முடியாது. வெறுப்பு அரசியலையே தனது திட்டமாக வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கடந்த கால தற்போதைய செயல்பாடுகளை கணக்கில் கொண்டுதான் அவர்களின் பேரணிக்கு அனுமதி கூடாது என்கிறோம். இவ்விசயத்தில், குறிப்பாக சட்டம் - ஒழுங்கு சார்ந்த விஷயங்களை உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுக்க தவறிவிட்டது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது சரியானது. பாராட்டுக்குரியது." என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in