Published : 22 Feb 2023 06:51 AM
Last Updated : 22 Feb 2023 06:51 AM
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-ம் ஆண்டுதொடக்க விழாவையொட்டி, நகரங்கள் மட்டுமின்றி அனைத்து கிராமங்களிலும் கட்சிக் கொடியேற்ற வேண்டும் என கட்சித்தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் கட்சியின் 6-ம் ஆண்டு தொடக்க விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சென்னை,ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் துணைத் தலைவர் ஏ.ஜி.மெளரியா தலைமையில் நிர்வாகக்குழு உறுப்பினர் ப்ரியா கட்சிக் கொடியேற்றினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்வில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அருணாச்சலம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மநீம தலைவர் கமல்ஹாசன் தனதுட்விட்டர் பதிவில், ``ஆரம்பித்த துடிப்புக்குறையாமல், 5 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். 6-ம் ஆண்டில்அடி எடுத்து வைக்கிறோம். உள்ளத்தில்எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக்கொள்வோமாக. அனைவருக்கும் வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT