Published : 22 Feb 2023 06:56 AM
Last Updated : 22 Feb 2023 06:56 AM

சென்னை | சட்டவிரோதமாக நடக்கும் இ-சிகரெட் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: புகையிலை கட்டுப்பாட்டு அமைப்பு கோரிக்கை

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக நடக்கும் இ-சிகரெட் விற்பனை யைதடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: இ-சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்களைத் தடை செய்வதற்கான ஆணையை மத்திய அரசு வெளியிடுவதற்கு முன்பே தமிழகத்தில் அதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், அண்மைக்காலமாக சென்னையில் சட்டவிரோதமாக இ-சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

சிறார்களும், வளரிளம் பருவத்தினரும் இ-சிகரெட்களுக்கு அடிமையாகியுள்ளனர். மற்ற மாநிலங்களில் இ-சிகரெட் விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்படுகிறது. இ-சிகரெட்கள் பறிமுதல்செய்யப்படுவதுடன், கடையின்உரிமையாளர் மீது நடவடிக்கைஎடுக்கப்படுகிறது.

ஆனால், சென்னையில் பரவலாக இ-சிகரெட் விற்பனை நடைபெறுகிறது. ஆனால் நடவடிக்கையோ, வழக்கு பதிவோ செய்யப்படவில்லை. சென்னை மாநகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை. இ-சிகரெட் விற்பனையைத் தடுத்து நிறுத்திநடவடிக்கை எடுக்க மாநகராட்சி முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x