சென்னையில் புதிதாக 26 புதிய நீரூற்றுகள்

சென்னையில் புதிதாக 26 புதிய நீரூற்றுகள்
Updated on
1 min read

சென்னை: சென்னையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிதாக 26 புதிய நீரூற்றுகள் நிறுவப்பட்டுள்ளன. சென்னையில் மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு சிறப்பு திட்டங்கள், நகரை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக இத்திட்டத்தின்கீழ் தற்போது ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் தலா 1 நீரூற்றும், மாதவரம்,தேனாம்பேட்டை, வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி ஆகியமண்டலங்களில் தலா 2 நீரூற்றுகளும், அடையாறு, ராயபுரத்தில் மற்றும் தலா 3 நீரூற்றுகளும், அதிகபட்சமாக திருவிகநகர் மண்டலத்தில் 4 நீரூற்றுகளும் என மொத்தம் 26 புதிய நீரூற்றுகள் நிறுவப்பட்டுள்ளன.

இவைகள் புதுமையான வடிவமைப்புடனும், இரவு நேரங்களில் வண்ணமிகு விளக்குகளால் மிளிரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in