

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழக அரசில் வெளிப்படை யான நிர்வாகம் இல்லை. மத்திய அமைச்சர்கள் தங்களது 3 ஆண்டு சாதனைப் பட்டியலை வெளியிட்டதைப்போல, தமிழக அமைச்சர்களும் ஓராண்டு சாதனைப் பட்டியலை வெளியிடச் செய்ய முதல்வர் கே.பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு இன்னும் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவு இருக்கிறது என்று தெரியும்.
‘ரஜினி தனிக் கட்சிதான் ஆரம்பிப்பார். பாஜகவில் சேரமாட்டார்’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆருடம் சொல்கிறார். பாஜக கூட்டணிக்காக ஏங்கவில்லை. கூட்டணி அமைக்க வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் கூட்டணி அமைப்போம்.
ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் ஆகியோர் ரஜினி பாஜகவுக்கு போகக்கூடாது என்கிறார்கள். இவர்களுக்கு ஏன் இவ்வளவு பதற்றம் என்பது தெரியவில்லை.
இவ்வாறு தமிழிசை கூறினார்.