

அரியலூர்: அரியலூர் ரயில் நிலையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக நேற்று கிடைத்த தகவலின் பேரில், அரியலூர் ரயில்வே போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர்.
விசாரணையில், உயிரிழந்து கிடந்தவர் உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த நரசிம்மலு(45) என்பதும், ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், அவரது செல்போனை போலீஸார் ஆய்வு செய்ததில், வாங்கிய கடனுக்கு கந்து வட்டி விதித்து, இருவர் அதிகபணத்தை தன்னிடம் வசூலித்து விட்டதாகவும், மேலும் பணம் கேட்டு தொல்லை கொடுப்பதால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் நரசிம்மலு பதிவு செய்திருந்த வீடியோ அதில் இருந்தது. அதை, உயிரிழப்பதற்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.