

2017-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வில், தனியார், அரசு பள்ளிகள் என ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 98.55 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடலூர் மாவட்டம் 88.74 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 93.86 சதவீதத்துடன் 22-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்தது. கடலூர் மாவட்டம் 84.86 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவிலும், விருதுநகர் முதலிடத்திலும், கடலூர் கடைசி இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:
வருவாய் மாவட்டம் | தேர்வு எழுதியவர்கள் | தேர்ச்சி பெற்றவர்கள் | சதவீதம் | பள்ளிகளின் எண்ணிக்கை |
கன்னியாகுமரி | 25271 | 24809 | 98.17 | 422 |
திருநெல்வேலி | 45662 | 43955 | 96.35 | 474 |
தூத்துக்குடி | 25074 | 24361 | 97.16 | 294 |
ராமநாதபுரம் | 17979 | 17648 | 98.16 | 248 |
சிவகங்கை | 19649 | 19063 | 97.02 | 269 |
விருதுநகர் | 28574 | 28160 | 98.55 | 340 |
தேனி | 16595 | 16114 | 97.10 | 198 |
மதுரை | 42803 | 40503 | 94.63 | 463 |
திண்டுக்கல் | 26885 | 25391 | 94.44 | 336 |
உதகமண்டலம் | 8682 | 8256 | 95.09 | 183 |
திருப்பூர் | 28842 | 27995 | 97.06 | 331 |
கோயம்புத்தூர் | 41649 | 40156 | 96.42 | 519 |
ஈரோடு | 26920 | 26373 | 97.97 | 351 |
சேலம் | 46993 | 44206 | 94.07 | 520 |
நாமக்கல் | 23433 | 22623 | 96.54 | 309 |
கிருஷ்ணகிரி | 25375 | 23630 | 93.12 | 376 |
தருமபுரி | 22893 | 21577 | 94.25 | 302 |
புதுக்கோட்டை | 24541 | 23599 | 96.16 | 313 |
கரூர் | 13007 | 12383 | 95.20 | 190 |
அரியலூர் | 11241 | 10491 | 93.33 | 164 |
பெரம்பலூர் | 9649 | 9165 | 94.98 | 136 |
திருச்சி | 37703 | 36565 | 96.98 | 434 |
நாகப்பட்டினம் | 22299 | 20382 | 91.40 | 272 |
திருவாரூர் | 17151 | 15774 | 91.97 | 208 |
தஞ்சாவூர் | 33844 | 32224 | 95.21 | 399 |
விழுப்புரம் | 47145 | 43285 | 91.81 | 549 |
கடலூர் | 36835 | 32689 | 88.74 | 410 |
திருவண்ணாமலை | 33080 | 30488 | 92.16 | 483 |
வேலூர் | 51840 | 46090 | 88.91 | 614 |
காஞ்சிபுரம் | 52943 | 49505 | 93.51 | 597 |
திருவள்ளூர் | 48865 | 44785 | 91.65 | 612 |
சென்னை | 51221 | 48078 | 93.86 | 571 |