புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.736 கோடி தேவை: மத்திய அமைச்சரிடம் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.736 கோடி தேவை: மத்திய அமைச்சரிடம் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிய பேருந்து நிலை யங்கள் கட்டுவதற்கு ரூ.736.64 கோடி வழங்க வேண்டும் என மத் திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.

தமிழக நகராட்சி நிர்வாகம், கிராமப்புற மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது அவர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

நகரமயமாக்கலில் இந்தியா விலேயே தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. தொழில் துறை வளர்ச்சி காரணமாக நகரப் பகுதி களில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் நகர மக்கள்தொகையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நகராட்சி யிலும் பேருந்து நிலையம் கட்டுவது அவசியமாகிறது.

அனைத்து நகராட்சிகளிலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி பேருந்து நிலையம் அமைக்க வேண்டியுள்ளது. எனவே, கோவை (ரூ.202.80 கோடி), திருச்சி (ரூ.150 கோடி), மதுரை (ரூ.20 கோடி), வேலூர் (ரூ.60 கோடி), ஈரோடு (ரூ.50 கோடி), திருநெல்வேலி (ரூ.45 கோடி), மயிலாடுதுறை (ரூ.33 கோடி), திண்டிவனம் (ரூ.15.60 கோடி), கரூர் (ரூ.36 கோடி), நாமக்கல் (ரூ.40 கோடி), திருவண்ணாமலை (ரூ.20 கோடி), குளித்தலை (ரூ.15 கோடி), தஞ்சாவூர் (ரூ.17.24 கோடி), தருமபுரி (ரூ.32 கோடி) ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்களை அமைக்க மொத் தம் ரூ.736.64 கோடியை மத்திய சாலைப் போக்குவரத்து துறை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in