Published : 22 Feb 2023 04:23 AM
Last Updated : 22 Feb 2023 04:23 AM

தி.மலையில் பாதுகாப்பு இல்லாத ஏடிஎம் மையங்களை மூடிவிடலாம்: ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்

தி.மலையில் நடைபெற்ற வங்கி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசும் ஆட்சியர் பா.முருகேஷ். அருகில், எஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்டோர். படம்:இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாத ஏடிஎம் மையங்களை மூடிவிடலாம் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

ஏடிஎம் மையங்களில் நடை பெற்ற கொள்ளை எதிரொலியாக வங்கியாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்பிஐ உட்பட 389 ஏடிஎம் மையங்கள் உள்ளன.

இங்கு, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு என்ன? அலாரம், காவலாளி பாதுகாப்பு இல்லாமல் போனது ஏன்? 3 எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடைபெற்றபோது, ஏன் அலாரம் அடிக்கவில்லை. ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி, ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? பாதுகாப்பு இல்லாத ஏடிஎம் மையங்களை மூடிவிடலாம்.

ஏஜென்சியிடம் ஒப்படைத்து விட்டோம் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறக்கூடாது. ஏஜென்சியிடம் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ன சொல்கிறது. அதனை நீங்கள் பின்பற்றாதது ஏன்? ஏஜென்சி மீது குற்றஞ்சாட்டுகிறீர்கள். உங்களுக்கு பொறுப்பு இல்லையா. கள ஆய்வு செய்து, குறைகளை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்” என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

இதையடுத்து எஸ்பிஐ அதிகாரிகள் அளித்த பதில் சரியாக இல்லாததால் ஆவேமடைந்த ஆட்சியர், “எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் மேற்கொண்ட பாது காப்பு என்ன? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல், நடைமுறை கதைகளை கூற வேண்டாம்” என்றார்.

காப்பீடு உள்ளதால் அலட்சியம்: தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேசும்போது, “எஸ்பிஐ வங்கியின் குறிப்பிட்ட ஏடிஎம் இயந்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து கொள்ளை யடித்துள்ளனர். வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்தபோது, ஏன்? அலாரம் அடிக்க வில்லை.

ஏடிஎம் மையங்களின் வெளி பகுதியில் போதிய வெளிச்சம் கிடையாது. காவலாளியும் இல்லை. கண்காணிப்பு கேமராக் களும் சரியாக செயல்படவில்லை. உங்களிடம் இருந்து சிறிய அளவில் கூட தடயம் கிடைக்கவில்லை. மேலும் ஒத்துழைப்பும் இல்லை. ஏடிஎம் மையங்களுக்கு காப்பீடு செய்துள்ளதால், இந்த கொள்ளையை நீங்கள் கண்டு கொள்ளவில்லை.

ஏடிஎம்-ல் உள்ள பணத்துக்கு யார் பொறுப்பு? இயந் திரங்களில் செயல்பாடுகளை ஆய்வும் செய்வதில்லை. புதுடில்லி மற்றும் மும்பையில் இருந்து தகவல் வர வேண்டும் என 2 நாட்களாக எங்களது நேரத்தை வீணடித்துள்ளனர். எங்களிடம் இருந்த பதற்றம் கூட, உங்களிடம் இல்லை. உயர் மட்டத்தில் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் மட்டுமே, நீங்கள் பதில் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஏடிஎம் மையத்துக்கும் ஒரு போலீஸாரை பாதுகாப்புக்கு கொடுக்க முடியாது. ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு களை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x