மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு

Published on

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் தற்காலிக கணக்கு உதவியாளர் பணி தொகுப்பூதிய முறையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மே மாதம் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் துறை ஆணையரும், மாநில குழந்தைகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளருமான ஆர்.லால்லெவனா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் மாநில குழந்தைகள் பாதுகாப்புச் சங்கத்தில் தற்காலிக கணக்கு உதவியாளர் பணி தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

பிளஸ் 2 வர்த்தகம் மற்றும் கணக்குப் பாடப்பிரிவு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணக்குத்துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது 40-க்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை சமூக பாதுகாப்புத்துறையின் இணையதளத்தில் (www.socialdefence.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 'ஆணையர் மற்றும் செயலர், மாநில குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம், சமூகப் பாதுகாப்புத்துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-10' என்ற முகவரிக்கு மே 18-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in