

தகுதித் தேர்வு தொடர்பான அச்சமின்றி பணிபுரிய, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில கல்வி அமைச்சருக்கு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2010-ம் ஆண்டு ஆக.23-க்கு பின், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி இன்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த ஏப்.29, 30-ல் நடந்த ‘டெட்’ தேர்வே இறுதி வாய்ப்பு என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பள்ளி, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
கடந்த 6 ஆண்டுகளில், எங்க ளிடம் படித்த மாணவர்கள் மாநில, மாவட்ட அளவில் மதிப்பெண் பெற ஊக்குவித்து அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளை பெற்றுள் ளோம். இருப்பினும், தகுதிகாண் பருவம் முடிந்து, 6 ஆண்டுகளுக் கும் மேலாக பணிபுரிகிறோம். தகுதித் தேர்வு நிபந்தனைக்கு உட்பட்ட ஆசிரிய, ஆசிரியை களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்க அரசு தவிர்ப்பாணை வெளியிட்டால் அச்சமின்றி பணி புரிவோம்.
தகுதித் தேர்வைக் காரணம் காட்டி வளர் ஊதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படை, பணிப் பதிவேடு தொடக்கம், விடுப்பு அனுமதிப்பு, தகுதிகாண் பருவம் நிறைவேற்றல் போன்ற வழக்கமான நடைமுறைகளை அனுமதிக்காமல் 6 ஆண்டு களாக மனவேதனையில் பணி புரிகிறோம்.
பல ஆசிரியர்களின் நியமன ஒப்புதல் அரசால் ஏற்கப் படாமல் ஊதியம் இன்றி பணி புரிகிறோம்.
எனவே, சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் களுக்கு, தகுதித் தேர்வுக்கு பதிலாக புத்தாக்கப் பயிற்சி மட்டும் போதும் என்பதுபோல, எங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.