குரல் மாதிரி சோதனைக்கு டிடிவி தினகரன், சுகேஷ் எதிர்ப்பு: டெல்லி நீதிமன்றத்தில் 18-ம் தேதி விசாரணை

குரல் மாதிரி சோதனைக்கு டிடிவி தினகரன், சுகேஷ் எதிர்ப்பு: டெல்லி நீதிமன்றத்தில் 18-ம் தேதி விசாரணை
Updated on
1 min read

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் குரல் மாதிரி சோதனை நடத்துவதற்கு டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர் தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற் காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.

தேர்தல் ஆணைய அதிகாரி களுக்கு லஞ்சம் கொடுப்பது குறித்து தினகரனும் சுகேஷும் பலமுறை செல்போனில் பேசியுள்ளனர். இந்த உரையாடலை போலீஸார் பதிவு செய்து வைத்துள்ளனர். பதிவு செய்யப்பட்டுள்ள குரல்கள் இவர்களுடையதுதான் என்பதை நிரூபிக்க, இருவருக்கும் குரல் மாதிரி சோதனை நடத்துவது அவசியமாகும்.

எனவே தினகரன், சுகேஷிடம் குரல் மாதிரி சோதனை நடத்த அனுமதி கேட்டு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 10-ம் தேதி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை கடந்த 10-ம் தேதி விசாரித்த நீதிபதி பூனம் சவுத்ரி, இதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தினகரன், சுகேஷ் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இரு மனுக்கள் மீதும்..

அதைத் தொடர்ந்து தினகரன், சுகேஷ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், குரல் மாதிரி சோதனை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த இரு மனுக்கள் மீதும் வரும் 18-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தினகரன், சுகேஷ் ஆகியோரின் நீதி மன்றக் காவலை வரும் 29-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in