

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று திருவாரூர் செல்கிறார். சென்னையில் இருந்து இன்று பகல் 11.15 மணிக்கு விமானத்தில் திருச்சிக்குச் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் வழியாக திருவாரூர் சென்று, அங்கு ஓய்வெடுக்கிறார்.
நாளை காலை 9.30 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு, மன்னார்குடி வடசேரி சாலையில் உள்ள மலர்மஹால் செல்கிறார். அங்கு காலை 10.30 மணிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு இல்லத் திருமணத்தை தலைமை வகித்து நடத்தி வைக்கிறார்.
பின்னர், அங்கிருந்து தஞ் சாவூர் வழியாக காரில் திருச்சி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிற்பகலில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.