Published : 25 May 2017 08:59 AM
Last Updated : 25 May 2017 08:59 AM

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம்: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் பரிதவிப்பு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், பொறியி யல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் சிபிஎஸ்இ மாணவர்கள் பரிதவிக்கிறார்கள்.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ல் முடிவடைந்தது. நாடு முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன்-டையு ஆகிய மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் கலந்துகொண்டனர். கடந்த ஆண்டு தேர்வு முடிவு மே 21-ம் தேதி வெளியானது. தற்போது மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அந்த மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் முறையை கைவிடுவதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதமாகி வருவ தாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. கருணை மதிப்பெண் வழங்குவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு முடிவடைந்த நிலை யில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட் டது. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாக தேதி விவரம் சிபிஎஸ்இ இணையதளத் தில் அதிகாரப்பூர்வ மாக வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், அதுபோன்ற அதிகாரப் பூர்வ அறிவிப்பு ஏதும் இணைய தளத்தில் வெளியாகவில்லை. தேர்வு முடிவு குறித்து சிபிஎஸ்இ வட்டாரத்தில் விசாரித்தபோது, தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படலாம். அநேக மாக 27-ம் தேதி (சனிக்கிழமை) வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்தனர்.

தேர்வு முடிவுகள் வெளியா வதில் தாமதமாகி வருவதால் பொறியியல் உள்ளிட்ட தொழிற் கல்வி படிப்புகளுக்கு விண்ணப் பிக்க முடியாமல் சிபிஎஸ்இ மாணவர்கள் பரிதவிக்கிறார்கள். தமிழகத்தில் பொறியியல் படிப் புக்கு மே 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x