

திருச்சி மகளிர் சிறையில் பெண் களை நிர்வாணப்படுத்தி சோதனை யிடுவது, நாப்கின் வழங்க மறுப்பது உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என ஜாமீனில் வந்த மாணவி தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதற்காக, கடந்த மாதம் 15-ம் தேதி கோவையில் இருந்து ரயிலில் வந்துகொண்டு இருந்த 2 மாணவி கள், 5 மாணவர்களை குளித் தலை ரயில் நிலையத்தில் போலீ ஸார் கைது செய்தனர். இதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவிகளை திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த மாணவிகளில் ஒருவர் நேற்று ஜாமீனில் விடுதலையானார்.
அவருக்கு பொதுநல மாண வர் எழுச்சி இயக்கம் உட்பட பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர் கள் சிறை வாசலில் வரவேற்பு அளித்தனர். அப்போது அந்த மாணவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருச்சி மகளிர் சிறைக்கு அழைத்து வரப்பட்ட எங்களை, அங்கிருந்த பெண் காவலர்கள், வலுக்கட்டாயமாக நிர்வாணப் படுத்தி சோதனை மேற்கொண்ட னர். இதேபோல, பலருக்கு மத்தி யில் மீண்டும் மீண்டும் தன்னை நிர்வாணப் படுத்தி சோதனையிட்ட னர். ஆபாச வார்த்தைகளாலும் திட்டினர்.
மேலும், பெரும்பாலான பெண் கைதிகளுக்கு நாப்கின் வழங்கப்படு வதில்லை. எனவே, தங்களுக்கு வழங்கப்பட்ட சேலையை கிழித்து, அவற்றை நாப்கின்களாக பயன் படுத்தும் நிலை உள்ளது.
இதுகுறித்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். அதற்கு முன், திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி, சிறை கண்காணிப்பாளர், உதவி சிறை அலுவலர், தொடர்புடைய காவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்” என்றார்.
மகளிர் சிறை கண்காணிப்பாளர் கோமளாவிடம் கேட்டபோது, “சிறை விதிகளுக்கு உட்பட்டே கைதிகளிடம் சோதனை நடத்தப்படு கிறது. அதேபோல, நாப்கினை நாங்களே விநியோகிக்கிறோம். சில நேரங்களில் நாப்கின் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான்” என்றார்.