

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப் பட்டுள்ள டிடிவி தினகரன் மீது, சட்டவிரோத பணப் பரிமாற் றம் செய்ததாக ஃபெரா சட்டத் தின் கீழ் அமலாக் கத்துறை அதிகாரிகள் புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.1.30 கோடியும் நரேஷிடம் இருந்து ரூ.50 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.
தினகரன், மல்லிகார் ஜூனாவை போலீஸார் காவ லில் எடுத்து விசாரித்தனர். இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து பல்வேறு இடங்களில் 3 நாட்கள் விசா ரணை நடத்தினர். தினகரன் உட்பட 4 பேரும் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெரிய அளவிலான பணப் பரிமாற்றம் குறித்து வழக்கு பதிவு செய்தால் அதுகுறித்த தகவல்களை வருமான வரித் துறைக்கும், அமலாக்கத் துறைக்கும் அனுப்புவது போலீஸாரின் வழக்கம். டிடிவி தினகரன் மீதான வழக்கில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் அதுபற்றி அமலாக்கத் துறைக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தினகரன் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் (ஃபெரா சட்டம்) செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று வழக்கு பதிவு செய் துள்ளனர்.
பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு களில் பதிவு செய்யப்பட்ட டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் டாலர் முதலீடு செய்தார் டிடிவி தினகரன். இதற்காக அவர் மீது அமலாக்கத் துறையினர் 1996-ல் ஃபெரா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 1994, 1996-ம் ஆண்டுகளில் தினகரனின் வங்கிக் கணக்குகளுக்கு வெளி நாடுகளில் இருந்து அதிக பணம் வந்தது. இதுகுறித்தும் 1996-ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
1996-ம் ஆண்டு ஜெ.ஜெ. டிவிக்கு கருவிகள் வாங்கியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாகவும் தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக தினகரன் மீது 7 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன.
‘ஃபெரா’, ‘ஃபெமா’ என்றால் என்ன?
இந்தியாவில் தொழில் நடத்தும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு பெரிதும் பரிச்சயமான விஷயம் ஃபெரா மற்றும் ஃபெமா. 1973-ம் ஆண்டு கொண்டு வரப் பட்டதுதான் அந்நியச் செலாவணி ஒழுங்கு முறைச் சட்டம். இதில் அந்நியச் செலா வணியை முறைப்படுத்துவது ஃபெரா. அந்நியச் செலாவணிகளை நிர்வாகம் செய்வது ஃபெமா.
இந்தியாவில் இருந்து வெளிநாடு களுக்கு பணப் பரிவர்த்தனை செய்வதற்கு ஃபெரா விதிமுறைகள் பொருந்தும். வெளி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் முதலீடுகளுக்கு ஃபெமா விதிமுறைகள் அமலாகும். ரிசர்வ் வங்கி அனுமதியுடன் மேற்கொள்ளவேண்டிய பரிவர்த்தனை அனைத்தும் ஃபெரா-வின் கீழ் வரும். இது மிகவும் பழமையான சட்டமாகும். இதில் 81 பிரிவுகள் உள்ளன. நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவாக இருந்த நேரத்தில் இச்சட்டம் கொண்டு வரப்பட் டது. இந்தப் பிரிவின் கீழ் பரிவர்த்தனை மேற்கொள்வது மிகவும் கடினமாகும்.
வெளிநாட்டு கரன்சிகளின் பரிவர்த் தனை அதாவது, பங்கு பத்திர முதலீடு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு வெளிநாட்டு கரன்சியை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை முறைப்படுத்துவதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் குறிப்பிட்ட பரிவர்த்தனை விதிகளை மீறு வோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவதோடு சிறை தண்டனை விதிக்கவும் சட்டப் பிரிவுகள் இடமளிக் கின்றன. இந்தியக் குடியுரிமை பெற்று வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் இந்தச் சட்ட விதிகள் பொருந்தும்.
வெளி வர்த்தக மற்றும் ஏற்றுமதி, இறக்கு மதி தொகைகளை எளிதாக செலுத்து வதற்காக கொண்டு வரப்பட்டதுதான் அந் நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (ஃபெமா) ஆகும். இதில் 49 பிரிவுகள் உள்ளன. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு திருப்திகரமான சூழலை எட்டியவுடன் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் சட்ட விதிகள் அவ்வளவு கடுமையானதாக இருக்காது.
இந்தியாவில் 6 மாதத்துக்கும் மேலாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கூட இப்பிரிவின் கீழ் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். விதிகளை மீறுவோர் மீது சிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தத் தவறும்பட்சத்தில் சிறை தண்டனை விதிக்கப்படும்.