

செங்கம் அருகே மின்னல் தாக்கி யதில் அரிசி ஆலை புகைக்கூண்டு இடிந்து விழுந்தது. இதில் 5 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, செங்கம் அருகே தளவநாயக்கன் பேட்டை கிராமத்தில் உள்ள அரிசி ஆலை யின் புகைக்கூண்டு, மின்னல் தாக்கி இடிந்து விழுந்துள்ளது. அப்போது, அதன் அருகே நின்றிருந்த 7 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதுப்பற்றி தகவலறிந்து செங் கம் காவல்துறையினர், வரு வாய்த் துறையினர் மற்றும் தீய ணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மின்னல் தாக்கியபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், மழை பெய்ததாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
சடலங்கள் மீட்பு
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 5 பெண் தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்கள் சொர்ப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த குமுதா, பார்வதி, அமுதா, ஆரவள்ளி மற்றும் குப்பம்மாள் ஆகியோர் என்று கூறப்படு கிறது.
மேலும் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள 2 பேர், செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.