

கடந்த வாரம் டெல்லியில் நடை பெற்ற முதல்வர்கள் மாநாட்டில் காவிரி குறித்து தமிழக முதல்வர் பேச கர்நாடக மாநிலத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுவது தொடர்பாக தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி விளக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவாக இருக்கிறாரா என்று முதல்வர் பழனிசாமியிடம் நிரு பர்கள் கேள்வி எழுப்பியுள் ளனர். அதற்கு பதில் அளித்த முதல்வர், “கடந்த வாரம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டில், காவிரி குறித்து பேசினேன். அதற்கு, மாநாட்டில் பங்கேற்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். அதில் பிரதமர் தலையிட்டு, என்னை பேச அனுமதித்தார். அதனால் பிரதமர் எங்களுக்கு ஆதரவாக உள்ளார்” என கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி குறித்து முதல்வர் பேசியதற்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம், தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. நடந்த சம்பவம் தொடர்பாக தமிழக மக்களுக்கு முதல்வர் விளக்க வேண்டும்.
வரலாறு காணாத வளர்ச்சி
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சியால் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியாலும், தற்கொலை செய்துகொண்டும் மரணமடைந்துள்ளனர். 82 பேருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிய தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வறட்சி யால் விவசாயிகள் சாகவில்லை என்று தெரிவித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே விவ சாயிகளின் இறப்புகள் முழுவதும் காவிரி பிரச்சினையால்தான் ஏற் பட்டது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து, நீதி பெற வேண்டும்.
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அவமதிக்கும் விதமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பாஜக நிர்வாகி எச்.ராஜா பேசிவருவது கண்டிக் கத்தக்கது. அவர் தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வேண்டும். மறுக்கும் பட்சத்தில் விவசாயிகளை திரட்டி சென்னை பாஜக தலைமையகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபடு வோம்.
விரைவில் அனைத்து விவசாயி கள் சங்க தலைவர்கள் ஒன்று கூடி மத்திய - மாநில அரசுகளின் விவசாயிகள் விரோத நடவடிக் கைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட இருக்கிறோம்.
பாகுபாடு இன்றி நிவாரணம்
தமிழக அரசு தற்போது விவ சாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியுள்ளது. அந்த நிவாரணம் பெரிய விவசாயிகளுக்கு மறுக்கப் பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, பாகுபாடு இன்றி பெரிய விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
மேலும் பெரிய விவசாயிகளுக் கும் கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடனை தள்ளுபடி செய்யாமல் தமிழக அரசு காலம் தாழ்த்திவருகிறது. அந்த கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.