கமல்ஹாசன் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன்
தமிழகம்
கை சின்னத்தில் மை வைத்தால் போதும்: கமல்ஹாசன்
சென்னை: நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை அதற்கு பதிலாக கை சின்னத்தில் மை வைத்தால் போதும் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் நேற்று (பிப்.19) வாக்கு சேகரித்தார்.
இது தொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும். ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்!" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
