நீட் தேர்வின் தாக்கத்தால் எம்பிபிஎஸ் படிக்க பிலிப்பைன்ஸுக்கு செல்லும் மாணவர்கள்

நீட் தேர்வின் தாக்கத்தால் எம்பிபிஎஸ் படிக்க பிலிப்பைன்ஸுக்கு செல்லும் மாணவர்கள்
Updated on
1 min read

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்று ஆவலாக இருந்த தமிழக மாணவர்களை ‘நீட்’ தேர்வு கவலையடையச் செய்துள்ளது. ‘நீட்’ தேர்வால் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவு வதால் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளவர்கள் பிலிப் பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ள னர்.

இது தொடர்பாக லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவன இயக்குநர் முகமது கனி கூறியதாவது:

சீனா, ரஷ்யா பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு அந்த மொழிகளை கற்க வேண்டியிருப்பதாலும், கடுங்குளிர் காரணமாகவும் நம் நாட்டைப் போன்ற சீதோஷ்ண நிலை, ஆங்கில வழிக்கல்வி, அமெரிக்க மருத்துவப் படிப்பை தரும் பிலிப்பைன்ஸ் நாட்டு மருத்துவக் கல்லூரிகளை நம் மாணவர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் இயங்கும் தவோ மருத்துவக் கல்லூரி, லைசியம் நார்த் வெஸ்டர்ன் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு லிம்ரா நிறுவனம் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக விளங்கு கிறது. நம் மாணவர்கள் 600 பேரை லிம்ரா இங்கு சேர்த்து மருத்துவம் பயிலச் செய்துள்ளது. தவோ மற்றும் லைசியம் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி, தேர்வு, விடுதி கட்டணம், பயணம், இதர செலவுகள் உட்பட முறையே ரூ.32 லட்சம் மற்றும் ரூ.28 லட்சம் வரை செலவாகும். கல்விக் கட்டணத்தை தவணையிலும் செலுத்தலாம்.

லிம்ரா மூலம் அங்கு கல்வி கற்க செல்பவர்களுக்கு உதவுவதற்காக தவோ நகரில் ஓர் அலுவலகம் லிம்ரா சார்பில் இயக்கப்படுகிறது. படிக்கும் மாணவர்கள் இந்தியா திரும்பியவுடன் எழுத வேண்டிய எம்.சி.ஐ. தகுதித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை லிம்ரா மாணவர்கள் 3 மற்றும் 4-ம் ஆண்டு படிக்கும்போதே பெறலாம்.

இந்த கல்வியாண்டில் லிம்ரா மூலமாக பிலிப்பைன்ஸில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள எம்.சி.ஐ. பயிற்சி வகுப்புகளை லிம்ரா இலவசமாக வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு: லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன், 177, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, எஸ்.எம்.எஸ். சென்டர், மைலாப்பூர், சென்னை-4. தொலைபேசி: 9445483333/ 9445783333/9444615363.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in