

சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு உட்பட்ட சித்ரபாளையத்தைச் சேர்ந் தவர் கனகராஜ் (38). இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர். அண்மையில் நடந்த கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கு தொடர்பாக கனக ராஜை போலீஸார் தேடிவந்தனர்.
இந்நிலையில் ஏப்ரல் 28-ம் தேதி ஆத்தூர் அருகே தென்னங் குடிபாளையத்தில் நடந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
கனகராஜின் செல்போனை கைப்பற்றி அதில் தொடர்பில் இருந்த எண்களைக் கொண்டு ஆத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கனக ராஜின் செல்போன் தொடர்பில் கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம் சட்டப்பேரவை தொகு தியைச் சேர்ந்த ஓபிஎஸ் அணி ஆதரவு எம்எல்ஏ ஆறுகுட்டி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்த ஆத்தூர் போலீஸார் அவருக்கு நேரில் சம்மன் வழங்கினர். இதை யடுத்து, நேற்று (16-ம் தேதி) மாலை ஆத்தூர் டிஎஸ்பி பொன்கார்த்தி முன்னிலையில், எம்எல்ஏ ஆறுகுட்டி ஆஜரானார்.
இதுகுறித்து சேலம் எஸ்பி ராஜன் கூறும்போது, ‘‘எம்எல்ஏ ஆறுகுட்டியிடம், கனகராஜ் சில காலம் ஆக்டிங் டிரைவராக பணி புரிந்துள்ளார். அதன் அடிப்படை யில் கனகராஜ் குறித்தும், அவரி டம் ஏற்பட்ட பழக்கம் குறித்தும் ஆறுகுட்டியிடம் டிஎஸ்பி விசாரணை நடத்தினார்” என்றார்.