

தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வந்த வேளாண் துறை அலுவலர் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் கடப்பேரி அற்புதம் நகரைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (35). இவர், தலை மைச் செயலகத்தில் வேளாண் துறை பிரிவு அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது, அவரது மனைவி சுதா கடைக்குக் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் தீபன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இறந்த தீபனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இது தொடர்பாக தாம்பரம் போலீஸார் வழக்கு பதிந்து விசா ரித்து வருகின்றனர். குழந்தைகளை டியூஷனுக்கு அழைத் துச் செல்லும்போது அங்கிருந்த ஒரு பெண்ணுடன் தீபனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு குடும்பத்திலும் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அந்தப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனம் உடைந்து தீபன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.