Published : 20 Feb 2023 05:37 AM
Last Updated : 20 Feb 2023 05:37 AM

தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேஜகூ செயல்படுகிறது: ஈரோட்டில் ஏ.சி.சண்முகம் விளக்கம்

ஈரோடு

தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படுகிறது, என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகவும், தமிழகத்தில் அதிமுகவும் தலைமை தாங்குகிறது. ரஷ்யாவில் நடந்த முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நான் சென்றிருந்தபோது, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், எல்லா துறைகளிலும் நாடு வளர்ந்துள்ளது என்று பெருமையாகக் கூறினர். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சியாக விளங்குகிறது.

திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்துவரி, பால் விலை மற்றும் இதர வரிகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன மின்கட்டண உயர்வால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறை வேற்றவில்லை. இந்த இடைத்தேர்தலில் அதிமுக வுக்கு கிடைக்கும் வெற்றி, மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உதவும், என்றார்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x