11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Updated on
1 min read

முதல்வர் தனிப்பிரிவு முன்னாள் அதிகாரி இன்னசன்ட் திவ்யா உள்ளிட்ட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் இதை அறிவித்துள்ளார்.

அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவிகள் (பழைய பதவிகள் அடைப்புக்குறிக்குள் உள்ளன) வருமாறு:

1. ஆனந்தராவ் விஷ்ணு பாட்டில்- மின் ஆளுமை ஆணையர் (மத்திய நிதித்துறை இணை செயலர்)

2. இன்னசன்ட் திவ்யா - உணவுத்துறை துணை செயலர் (முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி)

3. ஏ.ஆர்.ராகுல் நாத் - திட்ட அதிகாரி, மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை, கன்னியாகுமரி (பள்ளிக்கல்வித்துறை துணை செயலர்)

4. ஜி.எஸ்.சமீரன்- கூடுதல் இயக்குநர் மீன்வளம், ராமநாதபுரம் (சார் ஆட்சியர், பரமக்குடி)

5. அமர் குஷவா- திட்ட அதிகாரி, மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், உதகை (சார் ஆட்சியர், சிவகாசி)

6. பிரபு ஷங்கர் - சார் ஆட்சியர், திண்டிவனம் (சார் ஆட்சியர், செய்யாறு)

7. பி.ஆகாஷ் - சார் ஆட்சியர், சேரன்மாதேவி (சார் ஆட்சியர், திண்டுக்கல்)

8. ஆர்.லலிதா - துணை ஆணையர், சென்னை பெருநகர மாநகராட்சி (உணவுத்துறை துணை செயலர்)

9. ஆர்.கஜலட்சுமி- மேலாண் இயக்குநர், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம், சேலம் (முந்தைய பதவிக்கான உத்தரவு ரத்து)

10. வி.விஷ்ணு - செயல் இயக்குநர், சென்னை குடிநீர் வாரியம் (சார் ஆட்சியர் சேரன்மாதேவி)

11. பி.என்.ஸ்ரீதர்- மேலாண் இயக்குநர், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை (சார் ஆட்சியர் திண்டிவனம்)

மேலும், உதகை, மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட அதிகாரியாக பணியாற்றிய ஐஎப்எஸ் அதிகாரி தீபக் வத்சவா, கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக இருந்த எஸ்.சுரேஷ் ஆகியோருக்கான மாற்றுப்பணிகள், வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் என்று தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in